3 குற்றவியல் சட்டங்களை பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு: விழுப்புரத்தில் வக்கீல்கள் உண்ணாவிரதம்

3 குற்றவியல் சட்டங்களை பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விழுப்புரத்தில் வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-31 18:45 GMT

விழுப்புரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அருகில் நேற்று தமிழ்நாடு- புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகிய சட்டங்களில் இந்தி- சமஸ்கிருத பெயர் மாற்றம் செய்யும் மத்திய அரசின் மசோதாவை கண்டித்து நடைபெற்ற இப்போராட்டத்திற்கு வக்கீல் சங்க தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார். வக்கீல்கள் தமிழ்செல்வன், பாலகிருஷ்ணன், பன்னீர்செல்வம், சண்முகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் வக்கீல்கள் தனசேகர், ஜெயப்பிரகாஷ், தேவேந்திரன், சேகர், விஜயன், ராமலிங்கம், பிராங்க்ளின், சோமசுந்தரம், சரவணன், ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்