நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

குடியாத்தத்தில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-23 18:03 GMT

மத்திய அரசு இந்திய தண்டனைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகிய சட்டங்களின் பெயர்களை மாற்றியதை கண்டித்தும், புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளதை கண்டித்தும் குடியாத்தத்தில் அனைத்து வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் துணைச் செயலாளர் எஸ்.சம்பத்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பார் அசோசியேசன் தலைவர் எஸ்.கோதண்டன், துணைத்தலைவர் சி.தண்டபாணி, செயலாளர் வி.ரஞ்சித் குமார், பொருளாளர் வி.குப்பன், மூத்த வழக்கறிஞர்கள் கே.மோகன்ராஜ், எஸ்.திம்மரசு, எம்.வி.ஜெகதீசன், ஏ.எல்.சுரேஷ்பாபு, ஜி.ஜெயச்சந்திரன், கே.துரைசாமி, ரவீந்திரராஜு, எம்.செந்தில்குமார், என்.குமார் உள்பட ஏராளமான வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்