வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

சீர்காழியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-14 17:27 GMT

சீர்காழி;

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதி வ.உ.சி. தெற்கு தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது43). வக்கீலான இவர் சீர்காழி தென்பாதி மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் அலுவலகம் நடத்தி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது அலுவலகத்தை சீர்காழியை சேர்ந்த ராஜா மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட பலர் சேதப்படுத்தி பாலசுப்பிரமணியனை தாக்கியதாக கூறப்படுகிறது. இ்்ந்தநிலையில் போலீசார் பாலசுப்பிரமணியன் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து நேற்று சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒருங்கிணைந்த சார்பு கோர்ட்டில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் கோர்ட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்