நீதிமன்றத்தை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
நீதிமன்றத்தை புறக்கணித்து வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர் சங்கத்தினர், மத்திய அரசு நீதி துறையில் இந்திய சட்டம் என்று உள்ளதை பாரத் என்று பெயர் மாற்றம் செய்வதை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் சின்னத்துரை தலைமை தாங்கினார். இதில் பொருளாளர்கள் காரல்மார்க்ஸ், ஜெயபால், துணைச்செயலாளர்கள் செல்வநம்பி, சசிகுமார் உள்பட வக்கீல்கள் பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.