வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டம்

வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-09-20 17:27 GMT

அன்னவாசல்:

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வக்கீல்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், திருப்பூர் மகிளா நீதிமன்றத்தின் அரசு பெண் வக்கீல் ஜமிலாபானு, அவரது மகள் ஆகிய இருவரையும் அவரது அலுவலகத்தில் வைத்து பட்டப்பகலில் அரிவாளால் கொடூரமாக வெட்டியதை வன்மையாக கண்டிக்கின்றோம். மேலும் அரிவாளால் வெட்டியவர் மீது போலீசார் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும். வழக்கறிஞர்களை தாக்குவது என்பது இப்போது பரவலாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலை மாற வேண்டும். எனவே வக்கீல் ஜமிலாபானுவையும், அவரது மகளையும் கொடூரமாக வெட்டியவர்களை கண்டித்து இலுப்பூர் வக்கீல்கள் ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்