வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம்:
கோர்ட்டுகளில் இ-பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் முறையை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்வம், மூத்த வக்கீல் சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். , கோர்ட்டுகளில் வழக்குகளை நேரடியாக தாக்கல் செய்யக்கூடாது எனவும், இணைய மூலம் இ-பைலிங் முறையில் தாக்கல் செய்யவேண்டும் சென்று ஐகோர்ட்டு அறிவுறுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களின் பிணைய வழக்கை நேரடியாக தாக்கல் செய்யாமல் கணினி மையத்திற்கு சென்று அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, அதன்பின்னர் நீதிபதிகளிடம் தாக்கல் செய்யவேண்டும். ஒவ்வொரு வழக்குகளுக்கும் ஏராளமான பக்கங்கள் உள்ளன. அனைத்தையும் பதிவுயேற்றம் செய்யவேண்டும் என்பது ஏற்புடையது அல்ல. எனவே இ-பைலிங் முறையை திரும்ப பெறவேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மூத்தவக்கீல்கள் சக்கரபாணி, வைத்தியநாதன், முன்னாள் சங்க தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர் ரவிச்சந்திரன், பொருளாளர் ராஜசீனிவாசன், சசிகலா, பானுமதி, அனுராதா உள்பட திரளான வக்கீல்கள் கலந்து கொண்டனர். வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன. நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்த வழக்குகள் எல்லாம் வேறொரு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டன.