ஆலங்குடியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு

ஆலங்குடியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர்.

Update: 2023-07-01 19:02 GMT

தென்காசியில் வழக்கறிஞர் சங்க உறுப்பினர் அசோக்குமார் சமூக விரோதிகள் சிலரால் படுகொலை செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களாக வக்கீல்களை சிலர் குறி வைத்து படுகொலை செய்து வருகின்றனர். தமிழகத்தில் இதுபோன்று தொடர்ந்து நடந்து வருகிறது. வக்கீல்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் வழக்கறிஞர் சங்க தலைவர் ராஜா தலைமையில் நேற்று கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் வக்கீல்களுக்கு இயற்றப்பட்ட சட்டத்தைபோல் தமிழகத்திலும் சட்டம் இயற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை வைத்து கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதில் வழக்கறிஞர் சங்க செயலாளர், பொருளாளர் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர். இதனால் நேற்று நடைபெற இருந்த வழக்குகள் அனைத்தும் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்