துறையூரில் வக்கீல்கள் சாலை மறியல்

துறையூரில் வக்கீல்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-24 19:31 GMT

துறையூர் கோர்ட்டில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஜம்புநாதபுரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட குற்றவழக்குகள் துறையூர் கோர்ட்டில் வாதாடப்பட்டு வந்தது. இந்த நிலையில் இவ்வழக்குகள் முசிறி கோர்ட்டுக்கு மாற்றப்பட்டு விட்டது. இதை கண்டித்தும், ஜம்புநாதபுரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட வழக்குகளை மீண்டும் துறையூரிலேயே நடத்த கோரியும் வக்கீல்கள் திடீரென கோர்ட்டு முன்புள்ள சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்