வக்கீல்கள் சங்க இணை செயலாளராக நெமிலியை சேர்ந்த வழக்கறிஞர் நியமனம்
தமிழ்நாடு-புதுச்சேரி வக்கீல்கள் சங்க இணை செயலாளராக நெமிலியை சேர்ந்த வழக்கறிஞர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ், கூட்டமைப்பின் தலைவர் மாரியப்பன், மாநில பொதுச்செயலாளர் காமராஜ், பொருளாளர் முரளிபாபு ஆகியோர் இணைந்து வக்கீல்கள் சங்க இணை செயலாளராக நெமிலியை அடுத்த கணபதிபுரத்தை சார்ந்த வழக்கறிஞர் தமிழ்மாறன் என்பவரை நியமனம் செய்தனர். அவருக்கு நெமிலி, காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளை சேர்ந்த வழக்கறிஞர்கள் இவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.