பெண் போலீசாருக்கு சட்ட இறுதி தேர்வு
பேரூரணி போலீஸ் பயிற்சி பள்ளியில் பெண் போலீசாருக்கு சட்ட இறுதி தேர்வு நடைபெற்றது.
தூத்துக்குடி அருகே உள்ள பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் பயிற்சி பெற்று வரும் பெண் போலீசாருக்கான சட்டவகுப்புக்கான இறுதி தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வை பயிற்சி பள்ளி போலீஸ் சூப்பிரண்டு ராசராசன் முன்னிலையில், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எல். பாலாஜி சரவணன் நேரில் சென்று தேர்வு கண்காணிப்பு பணிகளை பார்வையிட்டார்.
அப்போது, காவலர் பயிற்சி பள்ளி துணை முதல்வர் ஜஸ்டின் ராஜ், நெல்லை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன், முதன்மை கவாத்து போதகர் பாஸ்கர், முதன்மை சட்ட போதகர் ஜென்ராஸ் பாபுனி ஆகியோர் உடன் இருந்தனர்.