நாகை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும்- அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்

நாகை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வலியுறுத்தி உள்ளது.

Update: 2023-01-29 19:15 GMT

வேதாரண்யத்தில் அணைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் நாகை மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு அட்சயா தலைமை தாங்கினார். அமைப்பின் மாநில நிர்வாக்குழு உறுப்பினர் சுதந்திரபாரதி முன்னிலை வகித்தார். சமூக ஆர்வலர் சிவகுரு.பாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாவட்ட செயலாளர் அம்பிகாபதி மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். நாகை மாவட்டத்தை மையமாக கொண்டு அரசு சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும். வேதாரண்யம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைத்து, கட்டமைப்புகளை மேம்படுத்தவேண்டும். தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்