சலவைத் தொழிலாளர் சங்க கூட்டம்
தூத்துக்குடியில் சலவைத் தொழிலாளர் சங்க கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சலவைத் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம் அண்ணாநகர் சலவைத்துறையில் வைத்து நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். மாநகர நிர்வாகிகள் சொக்கலிங்கம், வள்ளிமுத்து, பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில தலைவர் ராமமூர்ததி, பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீதம் இடஒதுக்கீட்டில் சலவைத் தொழிலாளர்களுக்கு 3 சதவீதம் தனி உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழை சலவை தொழிலாளர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வேல்முருகன், பொருளாளர் மூக்கன் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.