தமிழ்நாடு சலவை தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் கரூர் மாவட்ட கூட்டம் வெண்ணைமலையில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்பட்டு பொதுத்தேர்தல் மூலம் அடுத்த பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பது, மாவட்டத்தில் அனைவரும் நலவாரியத்தில் பதிவு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.