மொபட் மீது கார் மோதி சலவை தொழிலாளி பலி

மொபட் மீது கார் மோதி சலவை தொழிலாளி பலியானார்.

Update: 2022-10-08 18:42 GMT

அரவக்குறிச்சி அருகே உள்ள நாகம்பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 59). இவர் கரூரில் சொந்தமாக துணி தேய்க்கும் கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று காலை தனது மொபட்டில் கடையை திறப்பதற்காக சென்று கொண்டிருந்தார். அரவக்குறிச்சி அருகே ஆறுரோடு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த கார் ஒன்று சுப்பிரமணி ஓட்டி சென்ற மொபட் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்