கடற்படை பள்ளியில் தேசிய மாணவர் படை பிரிவு தொடக்கம்

கடற்படை பள்ளியில் தேசிய மாணவர் படை பிரிவு தொடக்கம்

Update: 2022-06-25 13:57 GMT

கோவை

கோவையில் உள்ள கடற்படை பள்ளியில் முதல் முறையாக தேசிய மாணவர் படையின் (என்.சி.சி.) கடற்படை பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. இது மதுரை என்.சி.சி. கடற்படை பிரிவின் கீழ் செயல்படும். இதையொட்டி கோவை கடற்படை பள்ளி வளாகத்தில் தேசிய மாணவர் படை தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதல் தொகுதிக்கு 13 மாணவர்கள், 12 மாணவிகள் உள்ளனர்.

விழாவில் தலைமை விருந்தினராக கம்மோடர் அசோக் ராய் கலந்துகொண்டு பேசினார். விழாவில் படைப்பிரிவுகளின் ஆய்வு, அணிவகுப்பு மற்றும் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் ராணுவ பிரிவு மற்றும் விமான படைப் பிரிவை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். தொடர்ந்து என்.சி.சி. மாணவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர். இதில் ஏர் கமடோர் ரஜ்னிஷ் வர்மா, கோவை என்.சி.சி. பிரிவு கமாண்டர் கர்னல் நாயுடு, மதுரை கடற்படை என்.சி.சி. பிரிவு லெப்டினன்ட் கமாண்டர் பெல்லியப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்