தரமற்ற உணவு பொருட்கள் குறித்து புகார் தெரிவிக்க புதிய இணையதளம், செயலி அறிமுகம்-கலெக்டர் தகவல்

நெல்லை மாவட்டத்தில் தரமற்ற உணவு பொருட்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக புதிய இணையதளம் மற்றும் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2023-05-26 19:04 GMT

நெல்லை மாவட்டத்தில் தரமற்ற உணவு பொருட்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிப்பதற்காக புதிய இணையதளம் மற்றும் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

புகார் தெரிவிக்க புதிய செயலி

நெல்லை மாவட்டத்தில் தரமற்ற கலப்பட உணவுகள் குறித்து பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாக புதிய இணையதளம் மற்றும் செல்போன் செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

பொதுமக்களுக்கு தரமான உணவு பொருட்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசின் உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது உணவு பொருட்களின் தரம் தொடர்பாக அவர்கள் கொடுக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக இந்த இணையதளம் மற்றும் செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்....

இதில் பொதுமக்கள் தங்கள் புகார்களை டைப் ஏதும் செய்யாமலே மிக எளிய முறையில் விவரங்களை தேர்வு செய்ய தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டு உள்ள புதிய இணையதளம் foodsafety.tn.gov.in மற்றும் செல்போன் செயலி TN food safety consumer App- ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் கியூஆர் கோடுவும் ெகாடுக்கப்பட்டு உள்ளது. இதில் மூலம் பொதுமக்கள் தங்கள் புகார்களை எளிய முறையில் தெரிவிக்கலாம். இதில் புகார் கொடுப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைத்துக்கொள்ளப்படும். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்