லாரி மோதி தொழிலாளி பலி

கள்ளக்குறிச்சி அருகே லாரி மோதி தொழிலாளி பலி

Update: 2022-06-01 17:00 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே உள்ள உலகங்காத்தான் கிராமத்தை சேர்ந்தவர் வைத்திலிங்கம் மகன் ரமேஷ்(வயது 42). தொழிலாளியான இவர் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது மனைவியை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டு விட்டு மீண்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருந்தார். உலகங்காத்தான் பஸ் நிறுத்தத்தில் சேலம்-சென்னை சாலையை கடக்க முயன்றபோது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ரமேஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்