லாரி மோதி விவசாயி பலி

ஒரத்தநாடு அருகே லாரி மோதி விவசாயி பலியானார்

Update: 2022-06-26 19:56 GMT

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள துறையூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமையன் (வயது 55). விவசாயி. இவர் நேற்று காலை பால் விற்பனை செய்வதற்காக வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்டு தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் மேலஉளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். மேலஉளூர் அருகே சென்று கொண்டிருந்தபோது அதே சாலையில் சிமெண்ட் ஏற்றி வந்த ஒரு லாரி ராமையன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் ராமையன் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.





Tags:    

மேலும் செய்திகள்