மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை,
சென்னை பாரிமுனையில் தமிழ் இசை சங்கம் 80-வது ஆண்டு விழாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசியதாவது:-
தமிழ் நீஷ பாஷை என்ற சொன்ன காலம் உண்டு; தமிழ் நீஷ பாஷை, ஆனால் அவர்களிடம் இருந்து பெறும் காசு, நீஷ காசு இல்லையா? என கேட்டவர் தந்தை பெரியார்.
தமிழ் இசை தமிழ்நாட்டில் கொடி கட்டி பறக்க காரணம் இந்த தமிழ் இசை மன்றம் தான். ஒரு மொழியை திணித்தால் எதையும் ஏற்க மாட்டோம் என்பது நம் மொழிக் கொள்கை.
மொழிதான் ஒரு இனத்தின் ரத்த ஓட்டம், மொழி அழிந்தால் இனமும் அழிந்து போகும். தமிழ் வளர்ச்சியும், தமிழனின் வளர்ச்சியும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை.
இவ்வாறு அவர் கூறினார்.