திருபுவனத்தில் இ்டத்தை கையகப்படுத்த எதிர்ப்பு

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இ்டத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-01-13 21:05 GMT

திருவிடைமருதூர்;

கும்பகோணம் அருகே திருபுவனத்தில் இ்டத்தை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 44 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலி அமைப்பு

கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான கம்பகரேஸ்வரர் கோவில் கட்டுப்பாட்டில் சன்னதி தெருவில் சுமார் 71 ஆயிரம் சதுர அடி தென்னந்தோப்பு இருந்து வந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் சாமி தூக்கும் பணியாளர்கள் 40 பேருக்கு அந்த இடத்தை கோவில் நிர்வாகம் பிரித்துக் கொடுத்தது. அந்த இடத்தில் கருங்கல் நட்டு கம்பி வேலி அமைத்து அடைத்து இருந்தனர்.

பேராட்டம்

இந்தநிலையில் அந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடம் என கண்டறியப்பட்டு திருவிடைமருதூர் தாசில்தார் சுசீலா, பேரூராட்சி நிர்வாக அதிகாரி டி.பங்கயர்செல்வி மற்றும் அலுவலர்கள் இடத்தை கையகப்படுத்த அதிகாரிகளுடன் வந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த கோவில் ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோவில் ஊழியர் செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் 3 மணி நேரமாக இடத்தின் முன்புறம் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

44 பேர் கைது

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்ளிட்ட 44 பேரை கைது செய்து அங்குள்ள ஒரு தனியார் திருமணம் மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். இதைத் தொடர்ந்து தாசில்தார் சுசீலா முன்னிலையில் அங்கு நடப்பட்டிருந்த கருங்கல்கள் கம்பி வேலிகள் அனைத்தும் பிரித்து எடுத்து பேரூராட்சி வாகனத்தில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டது. அரசு கைப்பற்றிய அந்த இடத்தில் அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை நடப்பட்டது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் இரவு விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்