என்.எல்.சி. கையகப்படுத்தும் இடத்துக்குபாரபட்சமின்றி இழப்பீடு வழங்க வேண்டும்மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் மனு

என்.எல்.சி. கையகப்படுத்தும் இடத்துக்கு பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் மனு அளித்தனா்.

Update: 2022-12-27 18:45 GMT


விருத்தாசலம் அருகே கெங்கைகொண்டான் பேரூராட்சி தாண்டவன்குப்பம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்துக்கு வந்து மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகனிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

மந்தாரக்குப்பம் கெங்கைகொண்டான் பேரூராட்சி1-வது வார்டு தாண்டவன்குப்பம் பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நத்தம் புறம்போக்கு இடத்தில் வசித்து வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடத்திற்கு மின் கட்டணம், வீட்டு வரி செலுத்தி வருகிறோம். இந்நிலையில் நாங்கள் வசிக்கும் இடத்தை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் கையகப்படுத்தும் முயற்சியில் உள்ளது. ஆனால் பட்டா இல்லாத எங்கள் இடத்துக்கு ஒரு விதமாகவும், பட்டா உள்ள இடத்திற்கு ஒரு விதமாகவும் இழப்பீடு வழங்க உள்ளதாக தெரிகிறது. ஆகவே அனைவருக்கும் அனைவருக்கும் பாரபட்சமின்றி இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்