26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவையர்கள் தர்ணா போராட்டம்

தமிழ்நாடு நில அளவையர் அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்ட மையம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம்மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-02-08 21:27 GMT


தமிழ்நாடு நில அளவையர் அலுவலர்கள் ஒன்றிப்பு மதுரை மாவட்ட மையம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம்மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தை மாநில தலைவர் முருகையன் தொடங்கி வைத்து பேசினார். போராட்டத்தை விளக்கி மாவட்ட செயலாளர் ரகுபதி பேசினார். அப்போது, களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க அனைத்து ஆவணங்களும் இணைய வழியாக்கப்பட்டதால் கைப்பிரதிகளில் மாறுதல் செய்யும் நடைமுறையை கைவிட வேண்டும். நில அளவையர் முதல் கூடுதல் இயக்குனர் வரை உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், நிலம் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளை அதிகமாக நில அளவர்கள் சந்திப்பதால் நீதித்துறை பயிற்சி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்