குன்னத்தில் நிலப்பிரச்சினை தீர்வு முகாம்

குன்னத்தில் நிலப்பிரச்சினை தீர்வு முகாம் நடைபெற்றது.

Update: 2023-02-18 18:25 GMT

பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி குன்னம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களின் நிலப்பிரச்சினை தீர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முகமது அபுபக்கர், குன்னம் தாசில்தார் அனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் மொத்தம் 12 மனுக்கள் பெறப்பட்டு 10 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்