இரட்டை ரெயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி

நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரெயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்பாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-04-11 20:02 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரெயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி தொடர்பாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்.

கலெக்டர் ஆய்வு

தெற்கு ரெயில்வே சார்பில் நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரை இரட்டை ரெயில் பாதை பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் நேற்று டிராலியில் மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரையிலான ரெயில்வே பாதையானது ஒற்றை வழியாக இதுநாள்வரை செயல்பட்டு வருகிறது. இப்பாதையை இரட்டை ரெயில் பாதையாக அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவது குறித்து நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அறிக்கை தாக்கல்

குறிப்பாக நாகர்கோவில் முதல் கன்னியாகுமரி வரையிலான வருவாய் கிராமங்களான பறக்கை, சுசீந்திரம், வடக்குத்தாமரைக்குளம், தெற்கு தாமரைக்குளம், அகஸ்தீஸ்வரம், கொட்டாரம் கிழக்கு, கொட்டாரம் மேற்கு, கோவளம் ஆகிய 8 வருவாய் கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் இரட்டை ரெயில்வே பாதை அமைப்பதற்கு தேவையான நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு அறிக்கையினை விரைந்து சமர்ப்பித்திட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறினார்.

ஆய்வின்போது தென்னக ரெயில்வே முதன்மை செயற்பொறியாளர் நிரஞ்சன் நாயக், துணை செயற்பொறியாளர் பமிலா, தனி தாசில்தார் (ரெயில்வே நிலமெடுப்பு அலகு-1) சுபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்