கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை
கோவில்பட்டி முத்துமாரியம்மன் கோவிலில் விளக்கு பூஜை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் முத்துமாரியம்மன், கருப்பசாமி கோவில் கொடை விழா நடந்து வருகிறது. விழாவையொட்டி சங்கரேஸ்வரி அய்யப்பன் பஜனை குழு சார்பில் 13-ஆம் ஆண்டு விளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு விளக்கு பூஜை வழிபாடுகள் நடத்தினர். நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.