லாலு பிரசாத் யாதவுக்கு பிறந்த நாள்: தமிழக முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்து

பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2023-06-11 05:17 GMT

சென்னை,

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, சாதிவாரிக் கணக்கெடுப்புக்காக குரல் எழுப்புவது, மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவது போன்றவற்றின் உறுதியான நிலைப்பாடுகளில் லாலு பிரசாத் யாதவ் சமூக நீதியின் அசைக்க முடியாத போராளியாக உள்ளார் என தமிழ்நாடு முதல் அமைச்ச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து செய்தியில், "மூத்த அரசியல் தலைவர் லாலு பிரசாத் யாதவ் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.கண்ணியத்திற்கு அவர் கொடுத்த முக்கியத்துவம், தந்தை பெரியாரால் வழிநடத்தப்பட்ட நமது சுயமரியாதை இயக்கத்தின் அரசியலுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு ஆகட்டும், சாதிவாரி கணக்கெடுப்புக்காக குரல் எழுப்புவது ஆகட்டும் அல்லது மதச்சார்பின்மையை நிலைநிறுத்துவது போன்றவற்றில் லாலு பிரசாத் யாதவின் உறுதியான நிலைப்பாடு அவரை சமூக நீதியின் அசைக்க முடியாத போராளியாக மாற்றியுள்ளது. அவரது 76 வது பிறந்தநாளில், வட இந்தியாவில் மண்டல் அரசியலை வலுப்படுத்த மக்கள் சேவையில் இன்னும் பல ஆண்டுகள் சுறுசுறுப்பாக இருக்க வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்