சேவுக பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்

சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா 22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-01 18:45 GMT

சிங்கம்புணரி

சிங்கம்புணரி சேவுக பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா 22 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்றது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக விழா

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட பூரண புஷ்கல சமேத சேவுக பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 22 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் முடிவு செய்து திருப்பணிகள் நடைபெற்றன. பணிகள் நிறைவடைந்து விக்னேஸ்வர பூஜை மற்றும் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து நான்கு காலபூஜையுடன், பூர்ணா குதி நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான ப.சிதம்பரம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில், திருப்பணிக்குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராம அருணகிரி வரவேற்றார். கிராமத்தின் முக்கியஸ்தர்கள் மற்றும் கோவில் பரம்பரை சிவாச்சாரியார்கள் யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் குடங்களை சுமந்து ராஜகோபுரத்திற்கும் மற்றும் மூலவர் சேவுக பெருமாள் பூரண புஷ்கலதேவி சேவகபெருமாள் அய்யனார், அடைக்கலம் காத்த அய்யனார், சுயம்பீஸ்வரர் மற்றும் மூல கணபதி, முருகப்பெருமான் போன்ற பரிவார தெய்வங்களின் கோவில் கோபுர கலசத்திற்கும் கொண்டு சென்றனர். அங்கு ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கலைநிகழ்ச்சிகள்

அதனை தொடர்ந்து வானில் கருடன் வட்டமிட சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் மதுராந்தகி நாச்சியார் பச்சைக்கொடி வீச புனித நீர் கோபுர கலசத்திற்கு ஊற்றப்பட்டது. பல மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து வந்திருந்தனர். பக்தர்கள் மீதும் மின் மோட்டார் பொருத்தப்பட்ட பம்புகள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது. இரவு கோவில் திருமண மண்டபத்தில் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியும் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

விழாவில் திருப்பணி குழு தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. ராம அருணகிரி குடும்பத்தார், தேவஸ்தான மேலாளர் இளங்கோவன், கண்காணிப்பாளர் தண்ணாயிரம், சிங்கம்புணரி அடைக்கலம் காத்த நாட்டார்கள், கிராமத்தார்கள், சிவகங்கை சீமை எட்மன் அம்பலம், சிங்கம்புணரி கிராம அம்பலம் ராம.சத்தியசீலன் குடும்பத்தினர், ஸ்பெயின் பாண்டியராஜன், சிங்கம்புணரி ஆர்.எம்.எஸ். குழுமத்தின் மணிமாறன் ஆயில் மில், ஆர்.எம்.எஸ். புசலியம்மாள் நர்சிங் ஹோம், ஆர்.எம்.எஸ்.பெட்ரோலியம் எண்டர்பிரைசஸ், ராஜலெட்சுமி சைவ, அசைவ உணவகம், ஆர்.எம்.எஸ். குழுமத்தின் குடும்ப உறுப்பினர்கள், பேரூராட்சி தலைவரும், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினருமான அம்பலமுத்து, பேரூராட்சி துணைத்தலைவரும், ஸ்ரீ சேவமூர்த்தி கார் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் நல சங்கத்தலைவர், தொடக்க வேளாண் கூட்டுறவு விற்பனை கடன் சங்க துணை தலைவர் இந்தியன் செந்தில், சிங்கம்புணரி தி.மு.க. நகர அவைத்தலைவரும், காந்திமதி நகை மாளிகை உரிமையாளருமான சிவக்குமார், ரங்கநாதன் காந்திமதி கோல்டன் பேலஸ், ஜி.எம்.இன்டர்லாக் நிறுவனத்தார், முன்னாள் சூரக்குடி ஊராட்சி தலைவர் ஆனந்த கிருஷ்ணன், சோமசுந்தரம் டவர்ஸ் உரிமையாளர் தர்ஷன் கண்ணா, சிங்கம்புணரி அ.தி.மு.க. பேரூர் செயலாளர் வாசு, எஸ்.வி.மங்கலம் அரளிபட்டி விளக்கு மகாராஜா பாலிடெக்னிக் கல்லூரி நிறுவனத்தார், ஊராட்சி செயலாளர்கள் சங்கம், சோனி சூப்பர் மார்க்கெட் சூர்யா, நிறுவனத்தார், பிரான்மலை வள்ளல் பாரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆதவன், தேவா மெடிக்கல் குடும்பத்தினர், உதவி பொறியாளர் செல்லையா குடும்பத்தினர், தி.மு.க. மாவட்ட பிரதிநிதி தனுஷ்கோடி, சிங்கம்புணரி தி.மு.க. 6-வது வார்டு செயலாளர் கார்த்திகேயன், வழக்கறிஞர் அறிவுடைநம்பி, சேது அசோசியேட் என்ஜினீயர் பில்டர்ஸ் உரிமையாளர் கண்ணன், முன்னாள் கவுன்சிலர் சுதர்சன், அம்மன் கிரானைட் டைல்ஸ் நிறுவனத்தார், சந்துரு, கூட்டுறவு சொசைட்டி மேற்பார்வையாளர் வையாபுரி செந்தில், செந்தில்நாதன் செட்டிநாடு ஓட்டல் உரிமையாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பங்கேற்றவர்கள்

அதேபோல் ஜனனி ஸ்டோர் உரிமையாளர் ஜெயராஜ் குடும்பத்தினர், மங்கையின் சூர்யா நிறுவன உரிமையாளர் பெரியசாமி குடும்பத்தினர், ஓம் சக்தி ஜோதிடம் மற்றும் ஆய்வு மையம் பிரான்மலை அங்காள பரமேஸ்வரி கோவில் அர்ச்சகர் பரம்பரை ராஜயோக ஜோதிடர் பிரான்மலை சக்தி அடிமை பாரதிதாசன், அ.காளாப்பூர் ஏ.ஆர்.கே. ஜூவல்லர்ஸ் மற்றும் மீனாட்சி பேங்கர்ஸ் உரிமையாளர் நாகராஜன், தி.மு.க. மாவட்ட பிரதிநிதியும், அ.காளாப்பூர் முன்னாள் ஊராட்சி தலைவரும், ஸ்ரீராம் ஜூவல்லர்ஸ் ஸ்ரீராம் ஓட்டல், ஸ்ரீராம் லாட்ஜ் உரிமையாளர் செல்வகுமார், சிவா ஷிப்பிங் ட்ரான்ஸ்போர்ட் பிரைவேட் லிமிடெட் மேனேஜிங் டைரக்டர் மேலப்பட்டி சிவக்குமார், கே.ஆர்.ஏ. மாடன் ரைஸ் மில் நிறுவனர் கே.ஆர்.ஏ.மனோகரன், சிங்கம்புணரி வடக்கு ஒன்றிய வர்த்தக அணி அமைப்பாளர் கே.ஆர்.ஏ.கணேசன் மற்றும் கே.ஆர்.ஏ.எம். அண்ணாமலை, ஷோபா பேமிலி ஷாப் நிறுவனத்தார், சிங்கம்புணரி ஆர்.எம்.எஸ்.ஆர்.பைபர், கயர், வே பிரிட்ஜ், டயர் ரீடிங் மர அருவை மில் ஸ்ரீராம் 100 டன் எடை மேடை, சேவுகமூர்த்தி பெட்ரோலியம் நிறுவனத்தார், எஸ்.எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி, எஸ்.எஸ்.மெட்ரிக் பள்ளி தலைவர் சந்திரசேகர், செயலாளர் செந்தில்குமார், ஆசிரியர்கள், வெங்கடேஸ்வரா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி உரிமையாளர் தொழில் அதிபர் கண்ணன் குடும்பத்தினர், சிங்கம்புணரி ஏ.ஜே. சூப்பர் ஸ்மார்ட், பயோ வேல்ட் நிறுவனத்தார், சிங்கம்புணரி மகாதேவ் மருத்துவமனை தலைமை மருத்துவரும், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் மருத்துவர் ஜெயகண்ணன், பெண்கள் நல மற்றும் மகப்பேறு சிறப்பு மருத்துவர் மீனா ஜெயகண்ணன், மகாதேவ் மருத்துவமனை நிறுவனத்தார், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெயராமன், பரம்பரை முதல் ஸ்தனிகர், எஸ்.வி.மங்களம் காளமேகம்பிள்ளை குடும்பத்தார், சிங்கம்புணரி கலை ஜூவல்லர்ஸ் நிறுவனத்தார், சிங்கம்புணரி சாரதி ஸ்டோர் உரிமையாளர் சேவுரத்தினம் மற்றும் செந்தில்குமார், எம்.ஆர்.ஜி. பால்பண்ணை நிறுவனர், குடும்பத்தினர், அணைக்கரைப்பட்டி ஊராட்சி செயலர் வடிவேலன், பிரான்மலை எம்.ஆர்.ஜி. மளிகை ஸ்டோர் உரிமையாளர் தியாகராஜன், தனம் பிரிக்ஸ் தனம் பேவர்ஸ் நிறுவன உரிமையாளர் சேவுகப் பெருமாள் மற்றும் குடும்பத்தினர், புஷ்பா நகை மாளிகை நிறுவனர் மற்றும் குடும்பத்தார், ஜானகி காண்ட்ராக்டர் மற்றும் ஜே.ஆர்.எஸ்.கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் சரவணன், சிங்கம்புணரி வணிகர் நல சங்க தலைவர், செயலாளர், பொருளாளர், சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், சிங்கம்புணரி கே.கே. கன்ஸ்ட்ரக்சன், கே.கே.ப்ளூ மெட்டல்ஸ், ஸ்ரீ கே.வி. ப்ளூ மெட்டல்ஸ் நிறுவனத்தார், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் திருப்பணி குழு தலைவர் ராம.அருணகிரி, அடைக்கலம் காத்த நாட்டார்கள், கிராமத்தார்கள், பரம்பரை ஸ்தானிகம் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் விழா நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்