தாசிரிப்பள்ளி ஏரிக்கரை உடையும் அபாயம்

வேப்பனப்பள்ளி அருகே தாசிரிப்பள்ளி ஏரிக்கரை உடையும் அபாய நிலையில் உள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Update: 2022-12-16 18:45 GMT

வேப்பனப்பள்ளி

வேப்பனப்பள்ளி அருகே தாசிரிப்பள்ளி ஏரிக்கரை உடையும் அபாய நிலையில் உள்ளதால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஏரிக்கரை உடையும் அபாயம்

வேப்பனப்பள்ளி அருகே உள்ள நாடுவனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட தாசிரிப்பள்ளி கிராமத்தில் 65 ஏக்கரில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் பல ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. கடந்த ஆண்டு பெய்த கனமழை காரணமாக ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இருப்பினும் ஏரியின் மதகுகள் சீரமைக்காமல் சேதமடைந்து உள்ளன.

இதனால் ஏரி நிரம்பியதால் கரையில் மண் அரிப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வெளியேறி வருகிறது. ஓரிரு நாட்களில் ஏரிக்கரை உடையும் அபாயம் உள்ளது. இந்த ஏரிக்கரை உடைந்தால் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 250 ஏக்கர் விவசாய நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பயிர்கள் சேதமடையும் என விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.

அலுவலர் உத்தரவு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வேப்பனப்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் சபரிநாதன், பொதுப்பணித்துறை அலுவலர்கள் ஏரிக்கரையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் ஏரிக்கரையில் மணல் மூட்டைகளை அமைத்து உடையாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டனர். ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஏரிக்கரை உடையும் அபாயம் ஏற்பட்டதால் தாசிரிப்பள்ளி, மேலூர்கொட்டாய், நெடுஞ்சாலை மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்