46 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரிகள்

46 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பிய ஏரிகளில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மலர்தூவினர்.

Update: 2022-11-16 17:52 GMT

கந்திலி ஒன்றியத்தில் 250 ஏக்கர் பரப்பளவில் உள்ள குனிச்சி, லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஏரிகள் 46 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிரம்பி வழிகிறது. இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து ஆடு வெட்டி, பூஜை செய்து மலர் தூவும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் சாந்தகுமார் தலைமை வகித்தார். சி.என். அண்ணாதுரை எம்.பி., நல்லதம்பி எம்.எல்.ஏ. ஆ௳ியோர் பூஜை செய்து மலர் தூவினர்.

நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கே.ஏ.குணசேகரன், முருகேசன், கே.எஸ்.ஏ. மோகன்ராஜ், ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன், துணைத்தலைவர் ஜி.மோகன் குமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஏரிகள் நிரம்பியதற்காக ஆடு வெட்ட பொதுமக்கள் முயன்றபோது இரண்டு இடங்களிலும் ஆடுகளை வெட்டக்கூடாது என எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தடுத்தனர். அவர்கள் சென்றவுடன் ஆடு வெட்டி பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்