18 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியது: தெப்பம் விட்டு விவசாயிகள் மகிழ்ச்சி

18 ஆண்டுகளுக்கு பிறகு ஏரி நிரம்பியது: தெப்பம் விட்டு விவசாயிகள் மகிழ்ச்சி

Update: 2022-10-27 18:45 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே முத்தாலி கிராமத்தில் உள்ள முத்தாலி ஏரி கடந்த 18 ஆண்டுகளாக நிரம்பாததால் அந்த பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டு கிராம மக்கள் அவதியடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓசூர் பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக முத்தாலி ஏரி நிரம்பியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த பெரிய முத்தாலி, சின்ன முத்தாலி, பெத்தகுள்ளு, சின்னகுள்ளு உள்ளிட்ட 10 கிராம மக்கள் நேற்று மாலை ஏரியில் தெப்பம் விட்டு, கிடா வெட்டி பூஜை செய்தனர்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த 2004-ம் ஆண்டு நிரம்பிய ஏரி பின்னர் அடுத்தடுத்து மழையின்றி ஏரியில் தண்ணீர் இல்லாமல் வறண்டது. இந்தாண்டு கனமழையின் காரணமாக ஏரி நிரம்பியது என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்