மலேசியாவில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தாருங்கள்- பெண் மனு

மலேசியாவில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தாருங்கள் என்று தஞ்சை கலெக்டரிடம், 2 குழந்தைகளுடன் பெண் கண்ணீருடன் மனு அளித்தார்.

Update: 2023-05-29 20:55 GMT

மலேசியாவில் இறந்த கணவரின் உடலை மீட்டுத்தாருங்கள் என்று தஞ்சை கலெக்டரிடம், 2 குழந்தைகளுடன் பெண் கண்ணீருடன் மனு அளித்தார்.

மலேசியாவில் இறந்த தொழிலாளி

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு, தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருமங்கலக்கோட்டை கீழையூர் கீழக்காலனியை சேர்ந்த செந்தில்குமார் மனைவி சுகந்தி (வயது 32), தனது 2 கைக்குழந்தை மற்றும் உறவினர்களுடன் வந்தார். பின்னர் அவர் கண்ணீர் மல்க, கலெக்டர் தீபக்ஜேக்கப்பிடம் ஒரு மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் செந்தில்குமார் கூலி தொழிலாளி ஆவர். அவர் கடந்த 8 மாதத்திற்கு முன்பு மலேசியா நாட்டிற்கு சென்றார். அங்கு சென்ற பின்னர் எனக்கு அடிக்கடி போன் செய்து பேசுவார். இந்த நிலையில் செந்தில்குமார் இறந்து விட்டதாக எங்களுக்கு மலேசியாவில் இருந்து போன் வந்தது.

உடலை கொண்டுவர நடவடிக்கை

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவர் எப்படி இறந்தார்? என தெரிவிக்கவில்லை. அவருடைய உடலை கொண்டு வருவதற்கு போதுமான வசதி என்னிடம் இல்லை. நான் வறுமையில் வசித்து வருவதால் எனது கணவரின் உடலை மலேசியாவில் இருந்து கொண்டுவருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்