அவினாசி தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதி ஏதும் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாக ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்குற்றம்சாட்டியுள்ளார்

அவினாசி தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதி ஏதும் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாக ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்குற்றம்சாட்டியுள்ளார்

Update: 2022-11-25 11:15 GMT

அவினாசி

அவினாசி தாலுகா அலுவலகத்தில் அடிப்படை வசதி ஏதும் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுவதாக ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர்குற்றம்சாட்டியுள்ளார்.

அவினாசி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் தலைவர் ஜெகதீசன் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் பிரசாந்த் குமார், ஒன்றிய ஆணையாளர்கள் மனோகரன், விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மன்ற பொருள் படிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கவுன்சிலர்கள் காரசார விவாத்த்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் பேசியதாவது.

10. வதுவார்டு கவுன்சிலர்கார்த்திகேயன்:

அவினாசி சுற்றுவட்டாரத்தில் உள்ள 31 ஊராட்சி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இட அளவீடு, பட்டா மாறுதல், பொதுப் பிரச்சனை, அடிப்படைத் தேவை உள்ளிட்ட பல வேலைகளுக்காக தினமும் வயதான பெண்கள் உள்ளிட்ட நூற்றுகணக்கானோர் தாலுகா அலுவலகம் வருகின்றனர். அங்கு நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையில் இருக்கை வசதி குடிநீர் வசதி, கழிவரை வசதி போன்ற அடிப்படைவசதியில்லாமல் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் சிரமப்படுகின்றனர். எனவே அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவினாசி சுற்றுவட்டாரபகுதியில் பனியன் தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளனர். இந்தநிலையில் ஏழை எளியோர் சிறுவிபத்தில் சிக்கினால் ஆம்புலன்சில் அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் குறைந்த தொலைவிற்கு கூட தாறுமாறாக அதிகப்படியான கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே ஏழை மக்களின் நலனை கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்ட துறையினர் தனியார் ஆம்புலன்ஸ் கட்டணத்தை முறைப்படுத்தி வாகனத்தில் அவசியம்அட்டவணை வைக்க வேண்டும். அவினாசிராஜன் நகரில் நெடுஞ்சாலை இடத்தில் அரசுக்கு சொந்த மான கட்டிடம் உள்ளது. அந்த இடத்தில் தனிநபர்கள் பயன்படுத்தி கொள்ள அனுமதி அளித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

முத்துசாமி:

2013-ம் ஆண்டில சேர்க்கப்பட்டதுப்பரவு பணியாளர்களுக்கு ரூ 6600 சம்பளம் வழங்க வேண்டும் ஆனால் அவர்களுக்கு ரூ 3 ஆயிரத்திலிருந்து 5000 மட்டுமே வழங்கப்படுகிறது மேலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியில் இருப்பவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் சம்பளம் தர வேண்டும் ஆனால் அவர்களுக்கு 6600 மட்டுமே வழங்கப்படுகிறது எனவே அவர்களுக்கு உரிய சம்பளம் வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊராட்சி பள்ளிகளில் தரமில்லாமல் மேலோட்டமாக வர்ணம் பூசப்படுகிறது-எனவே சுவர்களை தேய்த்து சுத்தப்படுத்தி இரண்டு கோட் வரணம் பூச நடவடிக்கை எடுக்க வேண்டும். வஞ்சிபாளையம் முதல் முருகம்பாளையம் வரை ரோடு பல இடங்களில் வெட்டப்பட்டு போக்குவரத்த பாதிக்கப்படுகிறது அதை உடனடியாக சீரமைக்க வேண்டும். கணியாம்பூண்டியில் ஏராளமான எஸ்.சி.மக்கள் உள்ளனர். இவர்கள் வீட்டில் சிறு விசேஷம் நடத்துவதற்கு கூட இடவசதியில்லாம சிரமப்படுகின்றனர். எனவே அப்பகுதியில் அவசியம் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்.

சேதுமாதவன்:

பழங்கரை ஊராட்சி பெரியாயிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் 505 மாணவரகள் படிக்கின்றனர். இங்கு குடிநீர் வசதி கிடையாது. குடிநீர் வசதி செய்ய வேண்டும். குளத்துப்பாளையத்தில் சாலை வசதியின்றி போக்குவரத்திற்குசிரமமாக உள்ளது. எனவே அங்குதார்சாலை அமைக்க வேண்டும். பெரியாயிபாளையத்திலுள்ள மின்மாற்றி அடிக்கடி பழுதடைந்து நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே பழுதடைந்த மின்மாற்றியை புதுப்பிப்பதுடன் ஜீவா நகரில் புதிதாக மின்மாற்றி அமைக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள பால்வாடி பள்ளிக்கு சமையலர் மற்றும் உதவியாளர் இல்லை. எனவே அங்கு பணியாளர்கள் நியமிக்க வேண்டும்.

அய்யாவு:

துலுக்க முத்தூர் ஊராட்சிகள்ளு மடை குட்டையில் அருந்ததிய மக்கள் அதிக அளவில் உள்ளனர். அங்கு பகுதிநேர ரேசன்கடை அமைக்க வேண்டும்.

எனது வாடில் துலுக்க முத்தூர் குப்பாண்டம்பாளையம் அய்யம்பாளையம் வடுகபாளையம் என நான்கு ஊராட்சிகள் உள்ளன.வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கும் பொழுது நான்கு ஊராட்சிகளுக்கும் தனித்தனியாக நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகள் நடைபெற உதவ வேண்டும்.

எனது வார்டு பகுதியில் கழிப்பறை அங்கன் வாடிகட்டிடங்கள் முழுமை பெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவே கட்டிடப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

சித்ரகலா :

தெக்கலூர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தின் அருகில் மிக அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது இதனால் அப்பகுதியில் நடந்து செல்பவர்களுக்கு மிகவும்சிரமம் ஏற்படுகிறது எனவே அந்தப் பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் ஆய்வு செய்து கூறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றியத்தில் பெரிய ஊராட்சியானதெக்கலூர் ஊராட்சியில் நிரந்தர செயலாளர் இல்லாததால் பொதுமக்கள் பணிகள் மிகவும் தாமதமாகிறது. எனவே தெக்கலூர்ஊராட்சிக்கு நிரந்தர செயலாளர் அமைக்க வேண்டும்.

ஒன்றிய குழுதலைவர் ஜெகதீசன்:

கவுன்சிலர்களின் அனைத்து கோரிக்கைகளும் விரைந்து நடைபெற ஆவன செய்யப்படும்.

இதுவரை ஒன்றிய வளர்ச்சிப்பணிக்காக ஒன்றிய பொது நிதி 15வது நிதிக்குழு மானியத்தின் மூலம் ரூ.15 கோடியே 79 லட்சத்தி 60 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

-

Tags:    

மேலும் செய்திகள்