தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது
திருச்செந்தூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை- தொழிலாளி, போக்சோ சட்டத்தில் கைது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி தையல் பயிற்சி வகுப்பிற்கு சென்றபோது, சாத்தான்குளம் புதுகிணறு பகுதியை சேர்ந்த சின்னத்துரை மகன் முருகன் (வயது 21) என்பவர் பழகியுள்ளார். முருகன், சென்டிரிங் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர்கள் காதலர்களாக வலம் வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 15-ந் தேதி வீட்டை விட்டு பயிற்சி வகுப்பிற்கு சென்ற சிறுமி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசில் சிறுமியின் பாட்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். போலீசார் விசாரணையில,் சிறுமியை முருகன் திருமண ஆசை காட்டி அழைத்து சென்றது தெரியவந்தது. மேலும் முருகன், சிறுமியை அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி மனோகரி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தார். சிறுமி மீட்கப்பட்டார்.