தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அவினாசி
அவினாசியை அடுத்த அவினாசிலிங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 43). பனியன் நிறுவன தொழிலாளி. இவருக்கு திருமணமாகி விட்டது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மாரியப்பனுக்கும் வேறொரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 6 மாதத்திற்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் பிரிந்துள்ளனர். இதில் மன வேதனையுடன் இருந்த மாரியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.