விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை
வாய்மேடு அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
வாய்மேடு;
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது50). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (45). இவா்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மகாலிங்கம் ஆயக்காரன்புலம் பகுதியில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஆயக்காரன்புலம் பாப்பிரெட்டி குத்தகை பகுதியில் நேற்று காலை அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடப்பதாக வாய்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் மகாலிங்கம் என்றும் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. மகாலிங்கத்தின் உடல் அருகே ஒரு பாட்டில் இருந்தது. இது குறித்து வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.