தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
அய்யம்பேட்டை அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
அய்யம்பேட்டை;
ஒரத்தநாடு தாலுகா மேலஉளூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது39). கூலித்தொழிலாளியான இவர் முதல் மனைவியை பிரிந்து அய்யம்பேட்டை அருகே நல்லிச்சேரி கீழத் தெருவை சேர்ந்த சுஜாதா என்ற பெண்ைண 2-வது திருமணம் செய்து அங்கேயே வசித்து வந்தார். இந்நிலையில் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஆனஸ்ட்ராஜ் வீட்டின் கொல்லைப்புறத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த அய்யம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆனஸ்ட்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.