காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு விடுப்பு- இரட்டிப்பு சம்பளம் வழங்காத 55 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்காத 55 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Update: 2022-10-02 18:45 GMT

காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு விடுப்பு அல்லது இரட்டிப்பு சம்பளம் வழங்காத 55 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து திருவாரூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வசந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

காந்தி ஜெய்தி விடுமுறை

சென்னை, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி திருச்சி கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபால் மற்றும் திருச்சி தொழிலாளர் இணை ஆணையர் கோவிந்தன் (கூடுதல் பொறுப்பு) வழிகாட்டுதலின்படி திருவாருர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) வசந்தகுமார் தலைமையிலான தொழிலாளர் துறை அலுவலர்கள் அடங்கிய குழு நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறை தினத்தன்று திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் இயங்கும் கடைகள், வணிக, உணவு மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் திடீர் ஆய்வு செய்தனர்.

55 நிறுவனங்கள்

இதில் 82 நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 25 கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், 30 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 55 நிறுவனங்கள் முறையாக அறிவிப்பு செய்து பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளமோ, மாற்று விடுமுறையோ முறையாக அளிக்க வழிவகை செய்யாமல் பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து அந்்த நிறுவனங்கள் மீது சட்டப்படியான வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்