தூக்குப்போட்டு கூலி தொழிலாளி தற்கொலை
மது போதையில் தாயை திட்டியதால் வேதனை அடைந்த கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மது போதையில் தாயை திட்டியதால் வேதனை அடைந்த கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தாய் கண்டித்தார்
மயிலாடுதுறை அருகே மாப்படுகை கன்னித்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் ராயப்பன் மகன் செல்வமுத்து (வயது 38). கூலித் தொழிலாளி. இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் உள்ள கணேசன் என்பவரது வீட்டின் எதிரில் அமர்ந்து மது அருந்தியுள்ளார்.
இதை கண்ட கணேசன் தனது வீட்டின் முன்பு அமர்ந்து மது அருந்தக்கூடாது என கூறியுள்ளார். இதனால் கணேசனுக்கும், செல்வமுத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த செல்வமுத்துவின் தாயார் அவரை கண்டித்துள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் மதுபோதையில் இருந்த செல்வமுத்து தனது தாயாரை கடுமையாக திட்டி அவரை அடித்ததாக தெரிகிறது. தாயை திட்டியதில் மன வேதனை அடைந்த செல்வமுத்து தனது வீட்டிற்கு சென்று மின்விசிறியில் தூக்கு போட்டு கொண்டார்.
இதனைக் கண்ட அவரது குடும்பத்தினர் செல்வமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரைபரிசோதித்த டாக்டர்கள் செல்வமுத்து ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.