சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் முத்திரை இன்றி பயன்படுத்திய 3 மின்னணு தராசுகள் பறிமுதல்- ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் நடவடிக்கை

சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ் முத்திரை இன்றி பயன்படுத்திய 3 மின்னணு தராசுகள் பறிமுதல்- ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் நடவடிக்கை

Update: 2022-08-18 21:08 GMT

ஈரோடு

சென்னை தொழிலாளர் ஆணையாளர் அதுல் ஆனந்த் உத்தரவின்படி, ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், ஈரோடு மாவட்ட தொழிலாளர் துறை துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஈரோடு மாவட்டத்தில் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.

சட்டமுறை எடை அளவு சட்டத்தின் கீழ், மீன் மார்க்கெட், இறைச்சி கடைகள் என 42 இடங்களில் ஆய்வு செய்து, முத்திரை இன்றி பயன்படுத்திய, 3 மின்னணு தராசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் மறுமுத்திரை இடப்பட்ட, மறுபரிசீலனை சான்றை வெளியே தெரியும்படி வைக்காத, 12 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டனர். எடை அளவு, மின்னணு தராசுகளை முத்திரையின்றி பயன்படுத்துவது சட்டப்படி தவறு. அவற்றை பறிமுதல் செய்வதுடன் அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தொழிலாளர் உதவி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்