லாரி- மோட்டார் சைக்கிள் மோதலில் தொழிலாளி பலி

லாரி- மோட்டார் சைக்கிள் மோதலில் தொழிலாளி பலியானார்.

Update: 2022-11-08 17:45 GMT

பரதராமி அருகே உள்ள பண்டப்பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30), கூலி தொழிலாளி. இவர் பண்டப்பல்லியில் இருந்து பரதராமிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். சாமிரெட்டிபல்லி கிராமம் தனியார் கல்லூரி அருகே செல்லும்போது ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து தாதுமணல் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி சென்ற லாரியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த சுரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, பரதராமி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்