லாரி மோதி தொழிலாளி பலி
காட்டுமன்னார்கோவில் அருகே லாரி மோதி தொழிலாளி பலி போலீசார் விசாரணை
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் அருகே கந்தகுமாரன் கிராமம் புதுரோட்டு தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை(வயது 75). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் காலை வீராணம் ஏரிக்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பொழுது காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து சேத்தியாத்தோப்பு நோக்கி வந்த லாரி அண்ணாமலை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.