விவசாயியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 6 மாதம் ஜெயில்

விவசாயியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2023-09-22 21:08 GMT

சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த பெரியகாடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 39), விவசாயி. கடந்த 2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ந் தேதி இவரது பட்டா நிலத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து குடிசை போட்டுள்ளனர். இதுகுறித்து அவர்களிடம் மணிகண்டன் கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, விவசாயி மணிகண்டன் தாக்கப்பட்டதால் அவர் சங்ககிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி வெங்கடேசன் (36) என்பவரை கைது செய்தனர்.

இந்த வழக்கு சேலம் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் விவசாயியை தாக்கிய வெங்கடேசனுக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி கிறிஸ்டல் பபிதா தீர்ப்பளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்