கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

கிணத்துக்கடவு அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

Update: 2022-12-24 18:45 GMT

கிணத்துக்கடவு

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள வடகரபதி, ஆத்துப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (வயது 25). கூலி தொழிலாளி. இவரது மனைவி சத்யா (25). 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது சத்யா கர்ப்பமாக உள்ளார். ராஜன் தனது குடும்பத்துடன் கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கிருந்து கூலி வேலை செய்து வந்தார். கடந்த 20-ந் தேதி ராஜன் தனது உறவினரான கிணத்துக்கடவு அருகே உள்ள சங்கராயபுரத்தை சேர்ந்த ஆனந்தகுமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கிணத்துக்கடவு வந்துவிட்டு மீண்டும் முத்துகவுண்டனூருக்கு சென்று கொண்டு இருந்தார். முத்துக் கவுண்டனூர் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் 2 பேரும் கிழே விழுந்தனர். இதில் ராஜன், ஆனந்தகுமார் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ராஜன், ஆனந்தகுமார் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ராஜன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்