கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

செலவுக்கு பணம் கொடுக்க முடியாததால் விரக்தி அடைந்த கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-08-01 16:07 GMT

சுல்தான்பேட்டை, 

சுல்தான்பேட்டை ஒன்றியம் வாரப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரபெருமாள் (வயது 45), கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. சுந்தரபெருமாள் தினமும் மது குடித்துவிட்டு, குடும்ப செலவிற்கு பணம் தராமல் இருந்து வந்தார். இதனால் சரஸ்வதி தனது கணவனை கண்டித்து உள்ளார். இதற்கிடையே மதுபழக்கத்தில் இருந்து மீள முடியாதது, குடும்ப செலவுக்கு பணம் கொடுக்க இயலாதது போன்றவற்றால் சுந்தர பெருமாள் மனமுடைந்து காணப்பட்டார். இந்தநிலையில் நேற்று முன்தினம் சுந்தரபெருமாள் வீட்டில் தூக்குப்போட்டு தொங்கிய நிலையில் இருந்து உள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் போது, வழியிலேயே சுந்தர பெருமாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுல்தான்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்