சேந்தமங்கலம்
பேளுக்குறிச்சி அருகே உள்ள கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 40). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லோகேஸ்வரி (34). இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தங்கராசு அடிக்கடி குடிபோதையில் இருந்து வந்துள்ளார். அதை தட்டி கேட்டதில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தங்கராசு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தங்கராசை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அந்த சம்பவம் குறித்து பேளுக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.