மது வாங்கி தராததால் ஆத்திரம்: கூலி தொழிலாளி அடித்து கொலை..! பெயிண்டர் கைது

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கூழி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-09-18 04:26 GMT

சென்னை:

சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (வயது 47) கட்டிட கூலி தொழிலாளி. இவரது நண்பர் மூர்த்தி (30) பெயிண்டர்.

கடந்த 13-ந் தேதி மாலை நண்பர்கள் இருவரும் கே.கே நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் ஒன்றாக மது அருந்தினர். அப்போது மீண்டும் மது வாங்கி தருமாறு கேட்டு மூர்த்தி கந்தனிடம் ரகளை செய்தார் ஆனால் அவர் வாங்கி தர மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மூர்த்தி கந்தனுடன் தகராறில் ஈடுபட்டார்.

அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்த நண்பர்கள் இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர் இதில் ஆத்திரமடைந்த மூர்த்தி கீழே கிடந்த உருட்டுக் கட்டையால் கந்தனை சரமாரியாக தாக்கினார். இதில் மண்டை உடைந்து பலத்த காயமடைந்த கந்தன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

தகவல் அறிந்து வந்த எம்.ஜி.ஆர் நகர் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் கந்தனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து மூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூர்த்தி நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கு கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்