சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

விழுப்புரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-04-14 19:15 GMT

விழுப்புரம்:

விழுப்புரம் திடீர்குப்பம் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமி, நேற்று முன்தினம் மதியம் அதே பகுதியில் உள்ள தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த கட்டிட தொழிலாளியான விழுப்புரம் அருகே சிந்தாமணி பகுதியை சேர்ந்த யூசுப் மகன் ரகுமான் (25) என்பவர் அந்த சிறுமியிடம் சென்று அருகில் உள்ள கடைக்கு சென்று சிப்ஸ் பாக்கெட் வாங்கி வருமாறு கூறியுள்ளார். அதன்படி அந்த சிறுமி, ரகுமானிடம் பணம் வாங்கிக்கொண்டு அங்குள்ள கடைக்குச்சென்று சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி கொடுத்துள்ளார். அந்த சமயத்தில் ரகுமான், அந்த சிறுமியை தனது வீட்டிற்குள் தூக்கிச்சென்று வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி, அழுதுகொண்டே வீட்டிற்கு வந்து பெரியம்மாவிடம் நடந்த சம்பவத்தை கூறினாள். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுபற்றி விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ரகுமான் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்