சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
போக்சோவில் கைது
ஈரோடு முத்தம்பாளையத்தை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 32). ஓட்டல் தொழிலாளி. இவர் வேலை செய்த ஓட்டலுக்கு வந்து சென்ற 16 வயது சிறுமியுடன் தண்டபாணிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்தநிலையில் ஆசை வார்த்தை கூறி தண்டபாணி அந்த சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர் பலாத்காரம் செய்ததில் அந்த சிறுமி கர்ப்பமடைந்தார். இதையடுத்து மருத்துவ பரிசோதனைக்காக தண்டபாணி ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுமியை அழைத்து வந்தார்.
சிறுமியின் வயதில் சந்தேகம் அடைந்த டாக்டர்கள் ஈரோடு அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று தண்டபாணியிடம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து தண்டபாணியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.