மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது

2-வது திருமணம் செய்ததை தட்டிக்கேட்ட மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-23 18:30 GMT

ஜெயங்கொண்டம் அருகே உள்ள இடங்கண்ணி குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 33), கூலி தொழிலாளி. இவரது மனைவி சூர்யா (21). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சதீஷ்குமார் திண்டுக்கல்லில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். அப்போது வாளரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ரஞ்சனி என்பவரை சதீஷ்குமார் 2-வதாக திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சூர்யா தனது கணவரிடம் இதுகுறித்து கேட்டு உள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ்குமார் சூர்யாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சூர்யா கொடுத்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்