இளம்பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

இளம்பெண்ணை பலாத்காரம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-01-18 18:16 GMT

கீரனூர் அருகே உள்ள கீழ நாஞ்சூரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 26). தொழிலாளி. இவரது உறவினரான 19 வயது இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அய்யப்பன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து உள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம் பெண் வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறினார். தொடர்ந்து அவர்கள் அந்த பெண்ணை டாக்டரிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது, அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்து சிறையில் அடைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்